தேமலை போக்கும் வீட்டு வைத்தியம்







இந்த வீடியோவில் நாம் பார்க்கபோவது தேமலை பற்றி .இது  சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடியது.. இந்த தேமல் மார்பு, முதுகு, கழுத்து, கை, கால், முகம் போன்ற இடங்களில், வெள்ளை நிற வட்ட திட்டுக்கள் போன்று காணப்படும்.இந்த பிரச்னை, அதிகமாக வியர்ப்பவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரைகளை பல நாட்களாக எடுத்து வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் அடிக்கடி வரும். இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டால், அது தற்காலிகமாக மறைந்து மீண்டும் வந்து விடுகிறது. இதற்கு இயற்கை  வைத்தியதின் மூலம் நிரந்தர தீர்வு காணமுடியும். இங்கே 5 தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது .வீடியோவை இறுதி வரை பாருங்கள்.



1 நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் மறையும்.
2 எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும். எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்
3 சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்
4 கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் சேர்த்து அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.
5 துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

தேமலை போக்கும் வீட்டு வைத்தியம் தேமலை போக்கும் வீட்டு வைத்தியம் Reviewed by Nalampera on 13:19:00 Rating: 5
Powered by Blogger.