முட்டை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு விடை இதோ .

.

 
   இப்போது அசைவம் சாப்பிடாதவர்கள்கூட, முட்டையை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். காரணம், முட்டையில் இறைச்சிக்கு நிகரான கொழுப்பும் புரதமும் நிறைந்துள்ளன. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உடனடியாக புரதம் மற்றும் கொழுப்பு கிடைக்கச் சிறந்த உணவு முட்டை. அதே சமயத்தில் முட்டை சாப்பிடுவது பற்றிய பல சந்தேங்கள் பலருக்கும் உண்டு. முட்டையை பற்றிய பல சந்தேகங்களுக்கு இந்த வீடியோவில் பதில் உள்ளது .வீடியோவை இறுதி வரை பாருங்கள்.


 முட்டையின் வெள்ளை கருவில் கொலஸ்ட்ரால் கிடையாது. ஆனால் முட்டையில் கொலஸ்ட்ரால் அடங்கியுள்ளது. அதாவது மஞ்சள் கருவை நீக்கி விட்டால், ஒட்டுமொத்த கொலஸ்ட்ராலும் அதனுடன் சேர்ந்து நீங்கிவிடும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் உள்ளவர்களும் வயதானவர்களும் இதனை கடைப்பிடிக்கலாம்.

முட்டையின் வெள்ளை கரு என்பது புரத்தத்தின் அரசனாகும். அதனால் அது அனைவருக்கும் மிகவும் நல்லதாகும். புரதம் என்ற அடிப்படையில், முட்டையின் மஞ்சள் கருவா அல்லது வெள்ளை கருவா என்ற கேள்விக்கு குழப்பம் இருக்காது. முட்டையின் வெள்ளை கருவில் இருந்து தான் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.. அதனால் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் வைட்டமின்கள் என்று வரும் போது, முட்டையின் மஞ்சள் கருவில், வெள்ளை கருவை விட அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் அடங்கியுள்ளது. ஒரு மஞ்சள் கருவில் பி6, ஃபோலேட், வைட்டமின் பி, பி12, ஏ, டி, ஈ மற்றும் கே வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இவைகள் முட்டையின் வெள்ளை கருவில் இருப்பதில்லை. இயற்கையாகவே வைட்டமின் டி அடங்கியிருக்கும் அரிதான உணவுகளில் முட்டையின் மஞ்சள் கருவும் ஒன்று என்பது  குறிப்பிட தக்கது.

மேலும் இதில் நிறைந்துள்ள கோலின் ஊட்டச்சத்து, மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். முதுமையில் வரும் கண்புரையைச் சரிசெய்யும். அல்சைமர் மற்றும் மனஅழுத்தத்துக்கு நிவாரணம் தரும்.

முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் 13 வகையான கனிமங்கள் உள்ளது. அதில் கால்சியம், மெக்னீஷியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம் மற்றும் செலினியம் அடக்கம். இதில் அதிகமானவை முட்டையின் மஞ்சள் கருவிலேயே உள்ளது. உதாரணத்திற்கு, 90 சதவீத கால்சியம் முட்டையின் மஞ்சள் கருவில் தான் உள்ளது. அதே போல் 90 சதவீத இரும்புச்சத்தும் கூட முட்டையின் மஞ்சள் கருவில் தான் உள்ளது. மஞ்சள்கருவில் உள்ள செலினியம் மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். உண்மையில், முட்டையின் வெள்ளைக் கருவைவிட மஞ்சள்கருவில்தான் அதிக ஊட்டச்சத்துத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே வளரும் பிள்ளைகளுக்கு தினமும் ஒரு  முட்டை கொடுப்பது அவசியமாகும். அதே சமயத்தில்  பிராய்லர் கோழி முட்டைகளைவிட நாட்டுக்கோழி முட்டைகளே சிறந்தவை.

வயதானவர்கள் வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை தினமும் ஒன்று சாப்பிடலாம். மஞ்சள் கரு சாப்பிடும் முதியவர்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டால் போதும்.இதய நோய் உள்ளவர்கள் ,நீரிலிவு நோயாளிகள் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடலாம்.
அதேபோன்று சாப்பிடும் நேரம் மிகவும் முக்கியமானது. காலை நேரத்தில் முட்டை உட்கொள்வது சிறந்தது. மதியம் உட்கொள்பவர்கள், அது சமைக்கப்பட்ட நேரத்தை அறிந்துகொண்டு சாப்பிட வேண்டும். சமைத்து வெகு நேரமான முட்டையைச் சாப்பிடாமல் இருப்பதே நல்லது. இரவில் சாப்பிட்ட பிறகு நம் உடல் உழைப்பு மிகவும் குறைவாக இருக்கும். எனவே, இரவில் முட்டை சாப்பிடுவதை  தவிர்த்துவிடலாம்.

பெண்களைப் பொறுத்த வரையில் முட்டையைச் சாப்பிடுவதால் அதில் உள்ள பையோடின்முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. உடல் எடை அதிகம் உள்ள பெண்கள் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். கர்பிணிப் பெண்கள் நல்ல தரமான முட்டையைப் பார்த்து வாங்கிச் சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் முட்டை சாப்பிடுவதால்… அதில் உள்ள ஃபோலேட் (folate) என்னும் விட்டமின், தாயின் ரத்த விருத்திக்கும், சிசுவின் மூளை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்
பேக்கிங் செய்யப்பட்ட முட்டைகளை தேதி பார்த்து வாங்கவேண்டும்.2. இதைத் தண்ணீரில் போட்டு மிதக்கிறதா என்று பார்க்க வேண்டும். கெட்டுப்போனது மிதக்கு  . இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு மேல் ஆன முட்டைகளை நிச்சயமாக பயன்படுத்தக்கூடாது. பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும். வாந்தி, வயிற்றுப்போக்கு என ஒரு உணவு நஞ்னால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகுமோ அத்தனையும் உண்டாகும். செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

முட்டையை 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைப்பது தவறு. அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் முட்டையில் பிரவுன் மற்றும் சாம்பல் நிறத்தில் ஒரு படிவம் படிந்துவிடும். அந்த முட்டைகளை உட்கொள்ளக் கூடாது. முட்டையை 7 நிமிடங்கள் வரை வேகவைத்தாலே போதுமானது.

முட்டை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு விடை இதோ . முட்டை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு விடை இதோ . Reviewed by Nalampera on 16:47:00 Rating: 5
Powered by Blogger.