அழகை அள்ளி தரும் விட்டமின் E ஆயில் .
வைட்டமின் ஈ ஆயில் நமக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. விட்டமின் ‘இ எண்ணையை நமது சருமத்திற்கு பயன்படுத்தினால் சூரிய வெப்பத்திலிருந்து சருமம் பாதுகாக்கப்படும். . தோல் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படாது. தழும்புகள் இருந்தால் மறைந்து விடும், ஃப்ரீரேடிகல்கள் அழிக்கப்படுவதால் சருமத்தின் இளமை பாது காக்கப்படுகிறது. பல சர்ம நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு இந்த விட்டமின் இ உதவுகிறது. சோரியாசிஸ் சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகளில் விட்டமின் இ சேர்க்கப்படுகிறது.இது தோலின் நோய் தடுப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. தோலிலிருந்து நீர் இழப்பை குறைக்கிறது.
இதை முகம், கை, கால்கள், தலைமுடிகளுக்கு பயன்படுத்தலாம். இந்த ஒரே வைட்டமின் ஆயில் நமக்கு பலவிதமான நன்மைகளை தருவதால், இனி நீங்கள் கெமிக்கல்கள் நிறைந்த க்ரீம்களை வாங்கி பணத்தை விரயம் செய்ய தேவையில்லை.மேலும் இது மிக குறைந்த செலவில், பல அற்புதமான பலன்களை தருவதால் உங்கள் பணமும் மிச்சமாகிறது. முக்கியமாக இதை அனைத்து சருமத்தினரும் பயன்படுத்தலாம். இப்போது வைட்டமின் ஈ ஆயிலை எதற்கெல்லாம் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்
முதலில்
முகத்திற்கு நகங்களை வலிமையாக வைத்துக்கொள்ள தினமும் இரவு நகங்களில் சிறிதளவு வைட்டமின் ஆயிலால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் நகங்கள் பொலிவு பெறுவதோடு, வலிமையும் அடையும்.
சிறிதளவு வைட்டமின் ஈ ஆயிலை ஆலிவ் ஆயிலுடன் கலந்து, கண்ணுக்கு கீழ் தடவி மசாஜ் செய்து வந்தால், கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மறைந்து கண்கள் ஜொலிக்கும்.
அரை டீஸ்பூன் வாஸ்லின் (Vaseline) உடன் சிறிதளவு வைட்டமின் ஈ ஆயில் கலந்து பாதங்கள் மற்றும் குதிகால்களில் தடவி வந்தால், பாதங்கள் மென்மையாகும். வெடிப்புகள் மறையும்.
தலையில் அரிப்பு ஏற்பட்டால் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், வைட்டமின் ஈ ஆயிலை கலந்து தலைமுடியின் வேர்ப்பகுதியில் மசாஜ் செய்தால் உடனடியாக நல்ல பலன் கிடைக்கும் வறண்ட தலைமுடியை கூட இது மென்மையாக மாற்றும். மேலும், சூரியனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தலைமுடியை காக்கும்.
இந்த
விட்டமின் e ஆயிலை தொடர்ந்து இரவு படுக்கும்
முன் முகத்திற்கு தடவி வந்தால் நாளடைவில் முகம் வெண்மையாக பொலிவாக பளிச்சென்று மாற
ஆரம்பிக்கும் .இது காப்சூல் வடிவில் அனைத்து மெடிக்கல் shop
கிடைக்கிறது. எனவே பல்வேறு சரும பிரச்சனைகளை போக்கும் இந்த
விட்டமின் e oil லை நீங்களும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
அழகை அள்ளி தரும் விட்டமின் E ஆயில் .
Reviewed by Nalampera
on
16:22:00
Rating:
Reviewed by Nalampera
on
16:22:00
Rating:
