உடல் எடையை குறைக்கும் கொள்ளு.

.

 
கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைச்சவனுக்கு எள்ளு என்பார்கள். கொள்ளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் உண்டு . உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்குதான் முதலிடம். உடல் எடையை குறைக்க கொள்ளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பற்றியும்    அதே சமயத்தில் அந்த கொள்ளு பானம் வேறு எந்த நோய்களைகளையும்  குணப்படுத்துகிறது  என்பதையும் தெரிந்து கொள்ள வீடியோவை இறுதி வரை பாருங்கள்

 பொதுவாக புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். ஆனால் சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. அதாவது சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளுதான் .
கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறுவார்கள்.. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால்தான் குதிரை கொழுப்பின்றி, . உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. மனிதர்களுக்கும் அப்படித்தான்.



அதுமட்டுமல்ல மூல நோய், ருமாட்டிசம், அல்சர் ,சிறுநீரகக் கற்கள், அதீத ரத்தப் போக்கு, இருமல், சளி, காய்ச்சல், ஆஸ்துமா ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து கொள்ளு. கொள்ளில் உள்ள நார் சத்து மலச்சிக்கலை போக்கி  குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது கொள்ளில் உள்ள கால்சியம் , பாஸ்பரஸ், இரும்பு, மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் விந்து உற்பத்தியை ஊக்குவிக்கின்றன.
சிக்குன் குன்யா நோய் பாதித்த வர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள்
இப்பொழுது கொள்ளு பானம் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கபோகிறோம்.

முதல் நாள் இரவே ஒரு ஐம்பது கிராம் கொள்ளை தண்ணிரில் கழுவிய பிறகு 750 மிலி தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு காலையில் வேகவைத்து அதை வடிகட்டி அந்த தண்ணீரில் கொஞ்சம் வெல்லம் கலந்து வெறும் வயிற்றில் பருகி வர தொப்பை குறையும். உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பு நீங்கும்.மற்ற நோய்களும் படிப்படியாக  விலகும்.

அதேபோன்று கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம
உடல் எடையை குறைக்கும் கொள்ளு. உடல் எடையை  குறைக்கும் கொள்ளு. Reviewed by Nalampera on 13:35:00 Rating: 5
Powered by Blogger.