சுண்டைக்காயின் மருத்துவ நன்மைகள்.

.

 
சுண்டைக்காய் பார்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதிக மருத்துவகுணம் உடையது.  இதில்  வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது 100 கிராம் சுண்டை காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி.  கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது. இந்த வீடியோவை நீங்கள் பார்த்து முடித்தவுடன் இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே என்று நினைக்க தோன்றும் .வீடியோவை முழுமையாக பாருங்கள்’.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் . நோய் கட்டுப்படும். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல்  நோய்களையும் நீக்க உதவுகின்றது..


சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.

அதேபோன்று சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்

மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும்

வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும் புளித்த ஏப்பம், , மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. எனவே உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக இருக்கும்போதே  அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும்.
சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்

எனவே நீங்களும் இனி சுண்டைக்காய்யை ஒதுக்காமல் வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொண்டு  சுண்டைக்காயின் நன்மைகளை பெற்றிடுங்கள்.

சுண்டைக்காயின் மருத்துவ நன்மைகள். சுண்டைக்காயின் மருத்துவ நன்மைகள். Reviewed by Nalampera on 13:53:00 Rating: 5
Powered by Blogger.