.சாமையின் மருத்துவ நன்மைகள்.

.




இன்றைய சூழ்நிலையில் மாதம் பிறந்ததுமே ஒரு பெருந்தொகையை மெடிசனுக்கு என்று ஒதுக்க வேண்டிய நிலை அதிகரித்து வருகிறது.இந்த நிலை மாற  நம் உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.இந்த வீடியோவில்  சாமை என்ற சிறுதானியத்தை நாம் அடிக்கடி சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன?  மற்ற தானியங்களை விட ஏன் சாமை சிறந்தது ? இது எந்தெந்த நோய்கள் வராமல் தடுக்கும்? என்பதை பற்றியும் பார்க்கபோகிறோம்.


நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை நார்சத்து மற்றும் இரும்புசத்து சாமையில்  அதிக அளவில் அடங்கியுள்ளதால், சிறு தானியங்களில் மிகச் சிறந்ததாக சாமை விளங்குகிறது.

100 கிராம் சாமையில் 7.7 கிராம் புரதச்சத்து உள்ளது. இந்த புரதம் உடல் வளர்ச்சிக்கு, எலும்புகளின் வலுவுக்கு, தசைகள், சதைகள் வலுவுடன் இருப்பதற்கு உதவுகின்றன. அதோடு, மூளைக்குச் செல்லும் செல்களுக்கு நல்ல சக்தியை தரும். மனச் சோர்வைப் போக்கும். நல்ல உறக்கம் பெறலாம். இதில் 7.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல் வராமலிருக்க உதவி புரியும். எடை அதிகரிக்காது . மாவுச்சத்து 67 கிராம் அளவு உள்ளது. இந்த மாவுச் சத்தில் எடையை அதிக மாக்கும் பசைத் தன்மை உடைய ‘க்ளூட்டன்’ அறவே இல்லை. அதனால் முழு நன்மையைத் தரும்.

இரும்புச்சத்து 9.3 மில்லிகிராம் அளவு உள்ளது. நமது ஒரு நாளையத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு 100 கிராம் அளவிலேயே கிடைத்துவிடும். இரும்புச்சத்து அதிகமுள்ளதால் ரத்தசோகை வராமல் தடுக்கும்... ஆரோக்கிய மான செல்கள் உற்பத்திக்கும் உதவி  புரியும்.  கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, பாலூட்டும் தாய்மார்களுக்கும் தரலாம். ரத்தசோகை ஏற்படா மல் இருக்க சிறு வயது முதல் சாப்பிடலாம். எல்லா வயதினருக்கும் ஏற்றது. இதில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் உருவாகாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர முதன்மை பங்கு வகிக்கும். இதய நோயாளிகளுக்கு  ஏற்ற உணவு. நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும்.  இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது தாது பொருட்களை உடலில்  அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது .

இதில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களைவிட அதி
கம். விளையாட்டு வீரர்களுக்கு நல்ல உடல் வலிமையை தரும். முட்டை சாப்பிடாதவர்களுக்கும் இந்த புரதம் பலனளிக்க வல்லது. சீக்கிரம் பசிக்காது

கம்பில் இருக்கும் இரும்புச்சத்தைவிட இதில் அதிகம் உள்ளது. கேழ்வரகில் இருப்பதைவிட இரண்டரை மடங்கு அதிகம்.அதேபோன்று கால்சியம் மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற பல முக்கிய தாதுகளையும் சாமையில் இருந்து பெறலாம். வைட்டமின் சத்துகள் என்று பார்த்தால்  பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், ஃபோலிக் அமிலம் இவைகளும் கிடைக்கும்.

இதில் பொங்கல், உப்புமா, இட்லி, தோசை, பணியாரம், பிரியாணி, புட்டு, முறுக்கு, அல்வா, லட்டு, கேசரி, அதிரசம், ரொட்டி போன்ற பல உணவுகளை சுவைபட  செய்து சாப்பிடலாம்.

இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல்  உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.


.சாமையின் மருத்துவ நன்மைகள். .சாமையின் மருத்துவ நன்மைகள். Reviewed by Nalampera on 14:04:00 Rating: 5
Powered by Blogger.