சீரகத்தை பல நோய்களுக்கு எப்படி பயன்படுத்துவது?





சீரகம் உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும்  தெரிந்த விசயம்.இந்த சீரகத்தை எந்தெந்த நோய்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்தால் நீங்களும் ஆச்சரியபடுவீர்கள்  .உண்மையிலேயே சீரகத்தை கொண்டு பல நோய்களை குணப்படுத்த முடியும்.


சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள் . இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. முக்கியமாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

அதுமட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம். இரும்பு சத்து இரத்த உற்பத்திக்கும் உதவியாக இருக்கிறது. சீரக நீரை பருகுவதால் உங்களது உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கிறது. மேலும்  lநீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும்

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை  மனநோய் குணமாகும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின்வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும். மேலும் நரை முடி வளருவதையும் தடுக்கிறது.அதனால் தலை முடி பிரச்சனை உள்ளவர்கள்  சீரக தண்ணீரை அடிக்கடி சாப்பிடுங்கள்.

சீரகத்தை பல நோய்களுக்கு எப்படி பயன்படுத்துவது? சீரகத்தை பல நோய்களுக்கு எப்படி பயன்படுத்துவது? Reviewed by Nalampera on 14:25:00 Rating: 5
Powered by Blogger.