தினமும் நடைப்பயிற்சி ஏன் அவசியம்
இன்றைக்கு எங்கு பார்த்தாலும் hospital ளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த அளவுக்கு நோய்களும் அதிகரித்து வருகிறது.அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் ஒன்று உணவு பழக்கம் அடுத்து உடல் உழைப்பு இல்லாமல் போனது.இதுபோன்ற இன்றைய சுழ்நிலையில் கட்டாயம் அனைவரும் வாக்கிங் செல்ல வேண்டியது அவசியமானது. வாக்கிங்தானே இதில் என்ன பெரிதாக இருக்கபோகிறது என்று நினைப்பீர்கள்.. இங்கே நீங்கள் பார்க்கபோவது உடல் உழைப்பு இல்லாததால் உண்டாகும் நோய்களையும் ஒரு 30 நிமிடம் தினமும் வாக்கிங் செல்வதால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்களையும் நன்மைகளையும் பற்றி பாற்காபோகிறோம்.வீடியோவை இறுதி வரை பாருங்கள்,,
தினமும், "வாக்கிங்' செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம், "இன்சுலின்' சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது. உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற, தொற்று அல்லாத, நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன.
நடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம் தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, "வாக்கிங்' எனப்படும் நடைப்பயிற்சி. தினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல் எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்னை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது.
நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது. "வாக்கிங்' செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது. இதனால், வயோதிகத்தில், "அல்சீமர், "டிமென்ஷியா' போன்ற ஞாபக மறதி தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
நடைப்பயிற்சியால், இரவில் நல்ல தூக்கம் வருவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை.
பொதுவாக சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள்.அதுபோன்று நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும்.எனவே சிரமும் பார்க்காமல தினமும் ஒரு அரைமணி நேரம் வாக்கிங் சென்று நோய்கள் வருவதை தடுப்போம்.
தினமும் நடைப்பயிற்சி ஏன் அவசியம்
Reviewed by Nalampera
on
14:18:00
Rating:
Reviewed by Nalampera
on
14:18:00
Rating:
