சதுரகள்ளியின் மருத்துவ நன்மைகள்.



   
    நமது தோல் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி, உடலின் வெப்பநிலையை சமப்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகிறது. ஆனால் இதே போல் பல நுண்கிருமிகளும் உயிர்வாழ இடமளிக்கிறது என்பதும்  உண்மை  . தோலில் நுண்கிருமிகள் இருந்தால்  அது ரத்தத்தில் கலந்துவிட வாய்ப்புண்டு. இதனால்  உடலில் பல பிரச்சனைகள் உண்டாகிவிடுகின்றன. தோலில் தோன்றும் நுண்கிருமிகளால் தோல் கடும் பாதிப்படைகிறது. அதாவது தோலில் அரிப்பு, வெடிப்பு , சொரி, சிரங்கு, படை, , கரப்பான், , முகப்பரு, , வெண்குட்டம், தலையில் தோன்றும் பொடுகு, பூச்சிவெட்டு, அக்குள், கழுத்துப்பகுதிகளில் கடும் அரிப்பு , தோல் சிவத்தல், செதில் செதிலாக உதிர்தல் போன்ற பல தொல்லைகளுக்கு தோலில் வளரும் கிருமிகளே காரணமாக அமைகிறது



அதுமட்டுமல்லஇந்தக் கிருமிகள் மூச்சுப்பாதை, உணவுப்பாதை என பலவிடங்களில் பல தொல்லைகளை உண்டுபண்ணுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதிகளில் பலவிதமான புழுக்களும் வளரத் தொடங்குகின்றன.

இதுபோன்ற நோயின் தீவிர நிலையில் கடும் காரத்தன்மையுள்ள மருந்துகளை உபயோகித்தால்தான் நோய் கட்டுப்படும். அந்த வகையில் காரத்தன்மை அதிகம் மிகுந்த, மூலிகை மருந்துச்சத்துக்கள் நிறைந்த அற்புத மூலிகைதான் சதுரக்கள்ளி.

சாலையோரங்களில் அதிகமாக முளைத்துக் காணப்படும் கள்ளி வகையைச் சார்ந்த இந்தச் செடிகள் சித்த மருத்துவத்தில் ஏராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த செடிகளின் பால் மற்றும் இலைச்சாறு மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதன் இலைச்சாற்றில் ப்ரைடலான், 3 ஆல்பா ஆல், 3 பீட்டா ஆல், டேராக்சரால், டேராக்சிரோன், பீட்டா அமீரின், போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சிரங்குகளை ஆற்றவும், பால்வினை நோய்களில் தோன்றும் புண்களை குணப்படுத்தவும் உதவுகின்றன.

சதுரக்கள்ளியை இடித்து, சாறெடுத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை  சொறி, சிரங்கு மற்றும் பிரச்சனை உள்ள இடங்களில் தடவி வந்தால் தோல் நோய்கள் மறைய தொடங்கும். அதேபோன்று  மிளகை சதுரக்கள்ளி சாற்றில் ஊறவைத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, நல்லெண்ணெயில் மூழ்கும்படி பத்து நாட்கள் வைத்திருந்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர பொடுகு, தலை அரிப்பு நீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் மகாமாரீச்சாதி தைலத்தில் சதுரக்கள்ளி இலைச்சாறு சேர்க்கப்படுகிறது. இதனை கிருமித்தொற்று உள்ள இடங்களில் தடவி வந்தால் தோல் நோய் குணமாகும்.

சதுரகள்ளியின் மருத்துவ நன்மைகள். சதுரகள்ளியின் மருத்துவ நன்மைகள். Reviewed by Nalampera on 16:11:00 Rating: 5
Powered by Blogger.