மங்குவை போக்கும் வீட்டு வைத்தியம்.



 சின்ன மச்சம் போல ஆரம்பிக்கிற இதை அலட்சியம் செய்யும் போது, அது கொஞ்சம்  கொஞ்சமாக பரவி, முகத்தையே விகாரமாக்கி, வெளியில் தலைகாட்ட விடாத அளவுக்குச் செய்து விடும் ஆண்கள் மற்றும் பெண்களை தாக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான், மெலாஸ்மா (Melasma) எனப்படும் மங்கு ஆகும்.

இந்த வீடியோவில்  முகத்தின் அழகையே கெடுத்துவிடும் மங்கு என்ற தோல் பிரச்சனை பற்றியும் அது எதனால் வருகிறது? இதை எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் எப்படி குணப்படுத்துவது ?என்பதை பற்றி பார்போம்.


மெலாஸ்மா (Melasma) பிரச்னை, 80 சதவிகிதப் பெண்களுக்கு வரக்கூடியது. சில ஆண்களுக்கும்கூட மங்கு வரும். இது நோய் அல்ல; சருமத்தில் ஏற்படக்கூடிய கறுப்பான பாட்சஸ், புள்ளிகள் எனச் சொல்லலாம். சருமத்தின் சில இடங்களில் கறுப்பு அணுக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாட்ச் பாட்ச்சாக கறுப்பாகத் தெரிகிறது.

சிலருக்கு  நெற்றி, மூக்கு, வாயைச் சுற்றிய பகுதிகளில் அதிகம் வரலாம். இன்னும் சிலருக்கு கன்னங்களில் வட்ட வட்டமாக வரலாம். தீவிரமானால் முகம் முழுவதுமே கூட கருப்பாக மாறலாம் இதை  ஆரம்பத்திலேயே சரி செய்ய வாய்ப்புகள் அதிகம்

இது எதனால் ஏற்படுகிறது இரும்புச் சத்துக் குறைபாடு, சூரிய ஒளி ஒவ்வாமை, நாள்பட்ட பொடுகு, தைராய்டு, அடிக்கடி பிளீச் செய்வதாலும் சிவப்பழகு க்ரீம்களை  பயன்படுத்துவதால் உண்டாகிற கெமிக்கல் அலர்ஜி, பாரம்பரியம், மெனோபாஸ் என மங்கு உண்டாக ஏராளமான காரணங்கள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இப்பொழுது மங்குவை போக்கும் இரண்டு எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி பார்க்கபோகிறோம்.

 1 பசும்பால்  2 ஸ்பூன், எலுமிச்சை சாறு  1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடந்து விடாமல் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.
2 தண்ணீர் விடாமல் அரைத்த புதினா சாறு அரை டீஸ்பூன், சிட்டிகை படிகாரத்தூள் இரண்டும் சேர்த்துக் குழைத்து, மங்கு உள்ள இடத்தில் தினமும்  தடவி, ஒரு 10 நிமிடம் வைத்திருந்து முகத்தை கழுவ வேண்டும்.இப்படி தொடந்து செய்து வந்தாலும் மங்கு மறைந்து விடும்.
இந்த இரண்டு முறையுமே எளிதான முறைதான் .எனவே மங்கு உள்ளவர்கள் இதில் ஏதாவது ஒன்றை தொடந்து செய்து மங்குவை போக்கி கொள்ளுங்கள்.

மங்குவை போக்கும் வீட்டு வைத்தியம். மங்குவை போக்கும் வீட்டு வைத்தியம். Reviewed by Nalampera on 15:04:00 Rating: 5
Powered by Blogger.